இஸ்ரேல் தாக்குதலில் சிரியா வீரர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் சிரியா வீரர்கள் உயிரிழப்பு

1 mins read
de261409-d2fc-4093-969c-3aed3060c488
-

சிரியாமீது இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

இஸ்ரேல் வான்வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது என்றும் அதில் பல பொருள்கள் சேதமடைந்தன என்றும் சிரியாவின் சனா செய்தி நிறுவனம் தெரிவித்தது.