அமெரிக்கா: உக்ரேனுக்கு மேலும் 600 மில்லியன் மதிப்பிலான ஆயுத உதவி

அமெரிக்கா: உக்ரேனுக்கு மேலும் 600 மில்லியன் மதிப்பிலான ஆயுத உதவி

1 mins read
5f4af56b-2cb1-4293-aa36-45d65e837a2b
-

உக்ரேன்-ர‌ஷ்ய போர் ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் அமெரிக்கா உக்ரேனுக்குப் பலமுறை நிதி, ஆயுத உதவிகளைச் செய்து வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா உக்ரேனுக்கு மேலும் 600 மில்லியன்மதிப்பிலான டாலர்கள் ஆயுத உதவியை அறிவித்துள்ளது.

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரேனிய ராணுவத்திற்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரேனுக்கு வழங்கப்படும். வெள்ளை மாளிகை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ர‌ஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.