தீ விபத்து; கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது

தீ விபத்து; கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது

1 mins read
91d7aacd-bf2a-412d-904c-06b3a5db4ca4
-

ஹனோய்: இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோ சி மின் நகரத்தில் செயல்பட்டு வந்த அந்த மூன்று மாடி கேளிக்கை விடுதியில், ஒன்பது நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த தீ விபத்தில்

32 பேர் உயரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். அப்போது

60 பேர் உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளரான

42 வயது லீ ஆன் ஸியுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீ தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அவர், விசாரணைக்காக நான்கு மாதங்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என்று காவல்துறையினர் கூறினர்.