தைவானில் நிலநடுக்கம்; குறைந்தது ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது

தைவானில் நிலநடுக்கம்; குறைந்தது ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது

1 mins read
44b9690f-237b-41a8-9780-7a3f4fc937f6
யூலி எனும் ஊரில் இடிந்து விழுந்த கட்டடம், படம்: ராய்ட்டர்ஸ் -

தைவானின் தென்கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) அன்று ஏற்பட்டது.

அங்கு குறைந்தது ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. தைவான் அருகில் உள்ள தனது தீவுகளுக்கு ஜப்பான் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.

தைத்துங் எனும் நகரத்துக்கு 50 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் பிற்பகல் 2.44 மணி அளவில் நிலநடுக்கம் தாக்கியது.

முதலில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று மதிப்பிடப்பட்டது. பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அந்த மதிப்பீட்டைத் திருத்தியது.

யூலி எனும் ஊரில் குறைந்தது ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. தைப்பே உள்ளிட்ட பல நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.

சமூக ஊடகங்களில் அது குறித்த காணெளிகள் பதிவேற்றப்பட்டன.

சில இடங்களில் ரயில்களும் கட்டடங்களும் பொம்மைகள் போல அசைந்தன.

நிலநடுக்கம் ஏற்பட்ட தைத்துங் நகரத்தில் நேற்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.