மலேசியப் பிரதமர்: தேர்தலை நெருங்கிவிட்டோம்

மலேசியப் பிரதமர்: தேர்தலை நெருங்கிவிட்டோம்

2 mins read
7611fd4b-cd62-4cf6-abc0-81ba4a152c25
அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி (வலமிருந்து இரண்டாவது), தேசிய முன்னணி கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் ஆகியோருடன் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (நடுவில்). படம்: மலேசிய ஊடகம் -

கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் அகமது ஹமிடியுடன் கலந்துரையாடி தேதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார் அவர்.

"என்னை நம்புங்கள். இன்னும் சில நாள்களுக்குப் பொறுமையுடன் இருங்கள். தேர்தலுக்கு நீங்கள் விடுக்கும் அழைப்பு எனக்குத் தெளிவாகக் கேட்கிறது," என்று அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியின் இளையர் அணிக்கான தேர்தல் தயார்நிலை இயக்கத்தைத் தொடங்கி வைத்துக் கூறினார் திரு இஸ்மாயில்.

அம்னோ கட்சியின் ஐந்து மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி நாட்டின் 15வது தேர்தலுக்கான தேதியை முடிவு செய்வர் என்று அவர் தெரிவித்தார்.

அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் முகம்மது ஹசன், உதவித் தலைவர்களான முகம்மது காலிட் நூர்டின், மட்சிர் காலிட், பிரதமர் இஸ்மாயில் ஆகியோர் அந்த ஐந்து மூத்த தலைவர்களாவர்.

"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அப்போது தேசிய முன்னணி வாகை சூடுவதுதான் முக்கியம்," என்று திரு இஸ்மாயில் கூறினார்.

மேடை­யில் நின்­று­கொண்டு திரு இஸ்­மா­யில் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது நாடா­ளு­ம­ன­றத்­தைக் கலைக்­கக் கோரி தேசிய முன்­ன­ணி­யின் இளை­யர் அணி­யி­னர் குரல் எழுப்­பி­னர். மலே­சிய நாடா­ளு­மன்­றத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்­துக்­குள் கலைக்க வேண்­டும். அத­னைத் தொடர்ந்து, 60 நாள்­க­ளுக்­குள் பொதுத் தேர்­தலை நடத்த வேண்­டும்.

தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­தும்­படி திரு ஸாஹிட் உட்­பட அக்­கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் அண்­மைக் கால­மாக திரு இஸ்­மா­யி­லுக்கு நெருக்­கு­தல் அளித்து வரு­கின்­ற­னர்.

பிள­வுப்­பட்டு கிடக்­கும் எதிர்க்­கட்­சி­கள் கூட்­டணி அமைக்க முடி­யாத நிலை தற்­போது நில­வு­வ­தால் அதைத் தனக்­குச் சாத­க­மா­கக் கொண்டு அம்னோ தேர்­த­லில் போட்­டி­யிட வேண்­டும் என்­பதே அவர்­க­ளது விருப்­பம்.

அண்­மை­யில், மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­ம­ரும் அம்னோ கட்­சி­யி­ன­ரி­டையே பிர­ப­ல­மாக இருந்த தலை­வ­ரு­மான நஜிப் ரசாக்­கிற்கு ஊழல் குற்­றம் தொடர்­பாக 12 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட பிறகு தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­தியே ஆக வேண்­டும் என்று அம்னோ கட்­சி­யி­னர் அடி­போ­டு­கின்­ற­னர்.

நஜிப்­பி­டம் நீதி­மன்­றம் நியா­ய­மாக நடந்­து­கொள்­ள­வில்லை என்று அவர்­கள் அதி­ருப்தி தெரி­வித்­

த­னர்.