யெரெவான்: ஆர்மினியா மீது அசர்பைஜான் தொடுத்துள்ள தாக்குதல் நியாயமற்றது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நேன்சி பெலோசி சாடியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் மோதல் தொடங்கியது.
மோதல் காரணமாக இதுவரை 200க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
நகோர்னோ-கரபாக் பகுதியைச் சொந்தம் கொண்டாடி இருநாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகாலமாக பகைமை நிலவுகிறது. ஆர்மினியத் தலைநகர் யெரெவானுக்கு பெலோசி நேற்று முன்தினம் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

