கிளந்தானில் கடத்தல்; தாய்லாந்தில் தீவிரத் தேடல்

கிளந்தானில் கடத்தல்; தாய்லாந்தில் தீவிரத் தேடல்

1 mins read
2b4aafbc-a02e-4e50-bcc5-7da7d9bb6b37
-

கோத்தா பாரு: மலே­சி­யா­வில் கிளந்­தான் மாநி­லத்­தில் உள்ள தும்­பாட் நக­ரி­லி­ருந்து கடந்த வாரம் கடத்­தப்­பட்ட மலே­சி­யப் பெண்­ணைத் தேடும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அழ­குப் பொருள்­கள் விற்­பனை முக­வ­ரான அந்­தப் பெண்ணை அவ­ரது வீட்­டி­லி­ருந்து கடத்­தல்­கா­ரர்­கள் கடத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­பெண் தாய்­லாந்­துக்­குக் கடத்­தப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, அப்­பெண்­ணின் படத்­தைக் கொண்ட துண்டு பிர­சு­ரங்­களை தாய்­லாந்து காவல்­துறை அந்­நாட்­டின் நரா­தி­வாட் மாநி­லத்­தில் உள்ள அனைத்து காவல் நிலை­யங்­க­ளுக்­கும் அனுப்பி வைத்­துள்­ளது.

சந்­தேக நப­ரின் படங்­களும் காவல் நிலை­யங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அந்த 36 வயது பெண்­ணைத் தேடிக் கண்­டு­பி­டிக்­கும் பணி­யில் கிளந்­தான் காவல்­து­றை­யி­ன­ருக்கு தாய்­லாந்­துக் காவல்­து­றை­யி­னர் உதவி வரு­கின்­ற­னர்.

கடத்­தப்­பட்­டுள்ள பெண்­ணைத் தேடி நரா­தி­வாட் மாநி­லத்­தில் உள்ள ஹோட்­டல்­கள், சரக்­குக் கிடங்­கு­கள், குடி­யி­ருப்­பு­கள் எனப் பல இடங்­களில் தாய்­லாந்­துக் காவல்­து­றை­யி­னர் அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­தி­னர்.

இருப்­பி­னும், கடத்­தப்­பட்ட பெண்­ணை­யும் சந்­தேக நப­ரை­யும் இன்­னும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை என்று நரா­தி­வாட் காவல்­து­றை­யின் தலை­வர் ஜென­ரல் வான் சிமான் தெரி­வித்­தார்.