லிஸ் டிரசுக்கு காத்திருக்கும் கடும் சவால்கள்

லிஸ் டிரசுக்கு காத்திருக்கும் கடும் சவால்கள்

1 mins read
c1002c6e-9daa-4433-8ed2-2477df93c0cf
-
Google News Preferred Icon

லண்டன்: எலிசபெத் அரசியாரின் மறைவையொட்டி பிரிட்டன் துக்கம் அனுசரித்து வருகிறது.

இன்று அரசியாரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதையடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் அலுவலகம் திரும்புவார். அலுவலகம் திரும்பியவுடன் பல நெருக்குதல்களை அவர் எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரட்டனில் பொருளியல் நெருக்கடி மோசமடைந்து வருவதால் திருவாட்டி டிரசுக்குப் பல கடுமையான சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாரம் நியூயார்க்கில் ஐநா பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.

பிரிட்டிஷ் பிரதமராக இதுவே திருவாட்டி டிரஸ் மேற்கொள்ளும் அதிகாரபூர்வப் பயணம். பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பு திருவாட்டி டிரஸ், வரிகள் குறைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

இருப்பினும், பிரதமர் பதவி ஏற்றவுடன் எரிசக்தி விலையைத் தக்கவைத்துக்கொள்ள அவர் நடவடிக்கை எடுத்தார்.

இது பிரிட்டிஷ் மக்களின் செலவினத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.