சீனாவில் பேருந்து விபத்து: 27 பலி

சீனாவில் பேருந்து விபத்து: 27 பலி

1 mins read
8042d798-297a-4f64-953e-c1fe218c9868
படம்: சீன சமூக ஊடகம் -
Google News Preferred Icon

சீனாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 20 பேர் காயமுற்றனர். விபத்துக்குள்ளானது ஒரு அரசாங்க சுகாதார பேருந்து என்றும் பேருந்தில் இருந்தவர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான தடைக்காப்பு வசதிக்கு கொண்டுசெல்லப்பட்டு கொண்டிருந்ததாகவும் சீன ஊடகம் ஒன்று தெரிவித்தது.

குவீசோ மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் பேருந்து கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் மொத்தம் 47 பேர் இருந்தனர்.

அண்மைய நாள்களில் குவீசோ மாநிலத்தில் கொவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த விபத்தைத் தொடர்ந்து கிருமித் தொற்றை சீன அதிகாரிகள் கையாண்டுவரும் விதம் குறித்து மக்கள் கொந்தளித்துள்ளனர். நிலவரம் குறித்து அதிகாரிகள் முழுமையான தகவல்கள் அளிப்பதில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.