நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த தைவான்; அதிர்வுகள் தொடர்ந்தன

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த தைவான்; அதிர்வுகள் தொடர்ந்தன

1 mins read
b32155e6-aecb-4aed-b6a5-127051d63f50
நிலநடுக்கம் காரணமாக தைவானில் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் உருக்குலைந்து காணப்படும் பாலம். படம்: ஏஎஃப்பி -

தைப்பே: தைவானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இதில் ரிக்டர் அளவில் 5.5 நிலநடுக்கமும் அடங்கும். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகள் தலைநகர் தைப்பேயிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாகவும் கிட்டத்தட்ட 150 பேர் காயமடைந்திருப்பதாகவும் தைவானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமையிலிருந்து தைவானின் கிராமப் பகுதிகளிலும் மக்கள் அதிகம் இல்லாத பகுதிகளிலும் பல நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சாலைகள், பாலங்கள், வீடுகள் போன்றவை சேதமடைந்தன.