ஆண்டிறுதிக்குள் தேர்தல்; அம்னோ தலைவர்கள் சூசகம்

ஆண்டிறுதிக்குள் தேர்தல்; அம்னோ தலைவர்கள் சூசகம்

2 mins read
7d2a7eb7-8597-41c0-97b3-ad1d2df3b1f0
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­தல் இவ்­வாண்­டுக்­குள் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று அம்னோ தெரி­வித்­துள்­ளது.

கூடிய விரை­வில் நாடா­ளு­

மன்­றம் கலைக்­கப்­ப­டக்­கூ­டும் என மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தி­ருப்­பது இதை உணர்த்­து­வ­தாக அம்­னோ­வின் தலை­மைச் செய­லா­ளர் அக­மது மஸ்­லான் கூறி­னார்.

"மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­தல் வரும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் டிசம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நடை­பெ­றும் என்ற நம்­பிக்கை அம்­னோ­வுக்கு உள்­ளது.

"ஆனால் வெள்­ளம் ஏற்­படும் முன்பே தேர்­தலை நடத்­தி­விட வேண்­டும்.

"டிசம்­பர் மாதத்­தில் வெள்­ளம் ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டால் அந்த மாதத்­தில் தேர்­தல் நடத்­து­வதை தவிர்க்க வேண்­டும். அதற்­குப் பதி­லாக நவம்­பர் மாதத்­தில் தேர்­தலை நடத்­த­லாம். தேர்­தல் நவம்­பர் மாதத்­தில் நடத்­தப்­பட்­டால் நாடா­ளு­மன்­றத்தை அக்­டோ­பர் மாதத்­தில் கலைக்க வேண்­டும்," என்று திரு அக­மது மஸ்­லான் கூறி­ய­தாக மலே­சி­யா­வின் மலாய்­மொழி நாளி­த­ழான சினார் ஹரி­யான் தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, பரு­வ­ம­ழைக் காலத்­தில் தேர்­தல் நடத்­து­வ­தில் எவ்­வி­தத் தவ­றும் இல்லை என்று அம்னோ கட்­சி­யின் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி கருத்து தெரி­வித்­துள்­ளார்.

"1999ஆம் ஆண்டு நவம்­பர் மாதம், பரு­வ­ம­ழைக் காலத்­தில் அப்­போ­தைய பிர­த­ம­ரான டாக்­டர் மகா­தீர் முகம்­மது தேர்­தலை

நடத்­தி­னார்.

"அப்­போது அது பெரிய விவ­கா­ர­மாக மாற­வில்லை. இதைப் பலர் மறந்­து­விட்­ட­னர்," என்று திரு ஸாஹிட் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

மலே­சிய வானிலை மையத்­தைப் பொறுத்­த­வரை மலே­சி­யா­வில்

பரு­வ­ம­ழைக் காலம் பொது­வாக செப்­டம்­பர் மாதம் தொடங்கி

ஆண்­டி­று­தி­யில் நிறை­வ­டை­யும்.

இதைக் கருத்­தில் கொண்டு எதிர்க்­கட்­சி­கள் அக்­கறை தெரி­வித்­துள்­ளன.

மலே­சியா­வில் ஆண்­டி­று­தி­யில் பெய்­யும் கன­ம­ழை­யால் நாட்­டில் உள்ள பல்­வேறு இடங்­களில் வெள்­ளம் கரை­பு­ரண்­டோ­டு­வது வழக்­கம் என்­பதை அவை சுட்­டின. குறிப்­பாக, கிழக்கு மாநி­லங்­க­ளான கிளந்­தான், திரங்­கானு, பாஹாங்­கில் நிலைமை மோச­மாக இருக்­கக்­

கூ­டும் என்று எதிர்க்­கட்­சி­யி­னர் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

அவ்­வாறு ஒரு­நிலை ஏற்­பட்­டால் வெள்­ளத்­தில் மாட்­டிக்­கொண்டு பல­ரால் வாக்­க­ளிக்க முடி­யா­மல் போகக்­கூ­டும் என்று அவர்­கள் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.

ஆனால் தோல்­விக்­குப் பயந்து எதிர்க்­கட்­சி­கள் இவ்­வாறு பேசு­வ­தாக திரு ஸாஹிட் தெரி­வித்­தார்.

"கடந்த பொதுத் தேர்­த­லில் எதிர்க்­கட்­சிக் கூட்­டணி வெற்றி பெற்­றதை அடுத்து, மலே­சி­யர்­

க­ளுக்­குத் தந்த வாக்­கு­று­தி­களை அது நிறை­வேற்­ற­வில்லை.

"எனவே, தேர்­தலை இப்­போது நடத்­தி­னால் தோல்வி அடைந்­து­வி­டு­வோம் என்று அவர்­கள் அஞ்சு­ கிறார்கள்," என்று திரு ஸாஹிட் தெரி­வித்­தார்.

தேசிய முன்­ன­ணிக்கு எதி­ராக மலே­சி­யர்­க­ளைத் திசை­தி­ருப்ப எதிர்க்­கட்­சி­க­ளுக்­குக் கூடு­தல் நேரம் தேவைப்­ப­டு­வ­தா­க­வும்

அத­னால்­தான் தேர்­தலை தற்­போது நடத்த வேண்­டாம் என அவை கூறு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

ஆனால் அத்­த­கைய வாய்ப்பை எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அம்னோ வழங்­காது என்று திரு ஸாஹிட் கூறி­னார்.