தோக்கியோ: ஜப்பானின் தென்
கிழக்குப் பகுதியை உலுக்கிய நன்மடோல் புயலால் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன.
குறைந்தது இருவர் மாண்டுவிட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் வெள்ளநீர் புகுந்த கார் ஒன்றுக்குள் மாண்டு கிடந்தார்.
ஏறத்தாழ 70 பேர் காயமடைந்ததாக ஜப்பானின் தேசிய தொலைக்காட்சி ஒளிவழி என்எச்கே தெரி
வித்தது.
பலத்த காற்று, கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டோடியது.
இதனால் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜப்பானின் தெற்கு, கிழக்குப் பகுதி களிலிருந்து ஏறத்தாழ 10 மில்லியன் குடியிருப்பாளர்களை வெளியேற்ற மீட்புப் பணியாளர்களுக்கு உத்தர
விடப்பட்டுள்ளது.
நன்மடோல் புயல் மணிக்கு 234 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாக ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்தது.
புயல் காரணமாக வெள்ளம்
மட்டுமின்றி நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதனால் பல கட்டடங்கள் சேத
மடைந்ததாகவும் மின்சாரக் கம்பி
வடங்கள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக நேற்று நண்பகலிலிருந்து குயூஷு தீவில் உள்ள கிட்டத்தட்ட 340,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வீடுகளில் வசிப்
பவர்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
தீவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் சாலைகளும் வயல்களும் நீரில் மூழ்கின.
துயர்துடைப்பு முகாம்களில் குறைந்தது 20,000 பேர் அடைக்கலம் நாடியதாக ஜப்பானிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

