பாரிஸ்: பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என்றழைக்கப்படும் திரு எலன் ராபர்ட் 60 வயதை எட்டியதை அடுத்து, மீண்டும் துணிகர சாகசத்தில் ஈடுபட்டார்.
கடந்த சனிக்கிழமையன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 48 மாடிக் கட்டடத்தில் அவர் ஸ்பைடர்மேனைப் போல வெறும் கைகளையும் கால்களையும் பயன்படுத்தி ஏறி அனை
வரையும் பிரம்மிக்க வைத்தார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த உயரமான கட்டடத்தில் ஏறியதாக திரு ராபர்ட் தெரிவித்தார். துபாயின் புர்ஜ் கலிஃபா, ஐஃபில் கோபுரம், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள 'கோல்டன் கேட்' பாலம் ஆகியவற்றில் திரு ராபர்ட் ஏறியுள்ளார்.
அனுமதி பெறாமல் உயரமான கட்டடங்களை அடிக்கடி ஏறும் பழக்கத்தைக் கொண்டுள்ள திரு ராபர்ட், தொடர்ந்து பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.