பயங்கரவாத குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ள உத்தரவு

பயங்கரவாத குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ள உத்தரவு

1 mins read
17fe1803-b6e3-4ce0-a616-bc027c310786
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கானுக்கு எதி­ரா­கச் சுமத்­தப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டு­களை மீட்­டுக்­கொள்­ளும்­படி அந்­நாட்­டின் உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

தமக்கு நெருக்­க­மான ஒரு­வ­ருக்கு பிணை மறுக்­கப்­பட்­டதை அடுத்து, பாகிஸ்­தா­னின் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் நீதித்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் எதி­ராக இம்­ரான் கான் மிரட்­டல் விடுத்­த­தாக கூறப்­ப­டு­கிறது. இது­தொ­டர்­பாக அவர் மீது பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின.

பயங்கரவாத குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டு இதுதொடர்பான வழக்கு விசாரணை சாதாரண நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.