'ஐஎஸ்' பெண்ணுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை

'ஐஎஸ்' பெண்ணுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை

1 mins read
5502c501-debb-478f-a0b2-0a532cb8a0d1
-

ஸூரிக்: ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­பின் பெய­ரைச் சொல்லி இரண்டு பேரைக் கத்­தி­யால் தாக்­கிய சுவிட்­சர்­லாந்­துப் பெண்­ணுக்கு அந்­நாட்டு நீதி­மன்­றம் ஒன்­பது ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதித்துள்ளது.

ஆனால் அவ­ருக்கு மன­நல சிகிச்சை வழங்க விதிக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தண்­டனை விதிக்­கப்­பட்ட 29 வயது பெண்­ணின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

மனித உயிர் மீது அவ­ருக்கு மரி­யாதை இல்லை என்று நீதி­பதி சாடி­னார்.

2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 24ஆம் தேதி­யன்று தென்­சு­விட்­சர்­லாந்­தில் நிகழ்ந்த தாக்­கு­த­லில் உயி­ரி­ழப்பு ஏற்­ப­ட­வில்லை.

கடை ஒன்­றில் பொருள்­கள் வாங்­கிக்­கொண்­டி­ருந்த இரு பெண்­கள் மீது அந்­தப் பெண் திடீ­ரென்று பாய்ந்து கத்­தி­யால் அவர்­க­ளது கழுத்தை அறுக்க முயன்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ்­விரு பெண்­களும் காயம் அடைந்­த­னர்.