விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

1 mins read
385b86f3-1c09-4f5c-a154-506d87e7a0d7
-
Google News Preferred Icon

இபிஎல்லின் ஆக இளைய ஆட்டக்காரரான நிவானெரி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கிய ஆக இளைய ஆட்டக்காரர் எனும் பெருமை ஆர்சனலின் ஈத்தன் நிவானெரியைச் (படம்) சேரும். அவருக்கு 15 வயது.

நேற்று முன்தினம் பிரென்ட்ஃபர்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் நிவானெரி மாற்று ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்டார்.

அந்த ஆட்டத்தை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் கைப்பற்றியது. நிவானெரியைக் களமிறக்கலாம் எனத் திடீரெனத் தமக்குத் தோன்றியதாக ஆர்சனல் நிர்வாகி மிக்கேல் ஆர்ட்டேட்டா தெரிவித்தார்.

வெஸ்ட் ஹேம்மை வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்ற எவர்ட்டன்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழுவை 1-0 எனுக் கோல் கணக்கில் எவர்ட்டன் நேற்று முன்தினம் தோற்கடித்தது.

சொந்த மண்ணில் விளையாடிய எவர்ட்டனின் வெற்றி கோலை நீல் மோபே போட்டார். இதுவே எவர்ட்டனுக்காக அவர் போட்ட முதல் கோல்.