'இருதரப்புக்கும் திருப்தி அளிக்கும் தீர்வுகள் தேவை'

'இருதரப்புக்கும் திருப்தி அளிக்கும் தீர்வுகள் தேவை'

3 mins read
8521560a-4611-406f-b24a-45702d8733bf
-

நியூ­யார்க்: அமைதி உடன்­ப­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக உக்­ரே­னிட

மிருந்து கைப்­பற்­றப்­பட்ட பகு­தி­களை ரஷ்யா திருப்பி ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று நியூ­யார்க்­கில் பிபி­எஸ் தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துக்­குப் பேட்டி அளித்த துருக்கி அதி­பர் ரிசெப் தையிப் எர்­டோ­வான் கூறி­னார். ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னி­டம் கடந்த வாரம் உஸ்­பெக்­கிஸ்­தா­னில் தாம் தீவி­ர­மா­கக் கலந்­து­ரை­யா­டி­ய­தாக திரு எர்­டோ­வான் தெரி­வித்­தார்.

"போரைக் கூடிய விரை­வில் நிறுத்த புட்­டின் தயா­ராக இருப்­ப­தா­கத் தோன்­று­கிறது. இது என்­னு­டைய கருத்து. தற்­போ­தைய நிகழ்­வு­கள் பெரும் சிக்­கலை ஏற்

படுத்­தி­யுள்­ளன," என்­றார் அதி­பர் எர்­டோ­வான். சண்டை நிறுத்­தம் ஏற்­பட வேண்­டு­மா­யின் கைப்­பற்­றப்­பட்ட பகு­தி­களை ரஷ்யா திருப்­பிக் கொடுத்­து­விட வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார். போர்க் கைதி­கள் பரி­மாற்­றத்­துக்கு இரு­த­ரப்­பும் இணங்­கி­யி­ருப்­ப­தாக திரு எர்­டோ­வான். இது­கு­றித்து கூடு­தல் விவ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை. உக்­ரேன் மீது படை­யெ­டுத்­த­தற்­காக புட்­டி­னுக்கு எதி­ராக நடவடிக்கை எடுக்­கப்­பட வேண்­டுமா என்று திரு எர்­டோ­வா­னி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளித்த திரு எர்­டோ­வான், இந்த விவ­கா­ரத்­தில் துருக்கி நடு­நி­லை­யு­டன் நடந்­து­கொள்­ளும் என்று தெரி­வித்­தார். சம்­பந்­தப்­பட்ட இரு­நா­டு­க­ளுக்­கும் திருப்தி அளிக்­கும் வகை­யில் தீர்வு காண வேண்­டும் என்­றார் அவர்.

இந்­நி­லை­யில் ஐநா பொதுக் கூட்­டத்­தில் பேசிய உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரோ குலேபா, இழந்த பகு­தி­களை மீட்க உக்­ரே­னி­யப் படை­கள் தொடுக்­கும் பதி­ல­டித் தாக்­கு­தல்­கள் தொடர, நட்பு நாடு­கள் ஆயுத உதவி வழங்க வேண்­டும் எனக் கேட்­டுக்­கொண்­டார். இதற்­கி­டையே, ரஷ்யா தனது ராணு­வத்­துக்கு ஆள் சேர்ப்­ப­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வ­தாக பெயர் குறிப்­பி­டாத அமெ­ரிக்க அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தி­ருப்­ப­தாக ராய்ட்­டர்ஸ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

உக்­ரே­னுக்கு எதி­ரான போரில் அண்மை நாள்­களில் ரஷ்­யா­வுக்­குப் பல பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

இதன் விளை­வாக ரஷ்­யா­வுக்­கா­கப் போரில் கள­மி­றங்க அந்­நாட்­டி­னர் பலர் மறுத்­து­விட்­ட­தாக அந்த அதி­காரி கூறி­னார். உக்­ரே­னுக்கு எதி­ரான போரில் சண்­டை­யிட ரஷ்­யக் கைதி­கள், தஜி­கிஸ்­தா­னி­யர்­கள், பெல­ரூஸ் நாட்­டி­னர், ஆர்­மி­னி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு ரஷ்­யா­வு­டன் நெருங்­கிய தொடர்­பு­டைய தனி­யார் ராணு­வ­மான

வேக்­னர் குழு­மத்­தின் தலை­வர் அழைப்பு விடுக்­கும் காணொளி இணை­யத்­தில் வலம் வரு­வதை அந்த அமெ­ரி­கக் அதி­காரி சுட்­டி­னார். ரஷ்­யா­வுக்­கா­கப் போரில் சண்­டை­யிட 1,500க்கும் மேற்­பட்ட கைதி­களை ஆள் சேர்க்­கும் பணி­யில் வேக்­னர் குழு­மம் முயற்சி செய்­வ­தாக அமெ­ரிக்கா நம்­பு­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் ரஷ்­யா­வுக்­கா­கப் போர் புரிய அந்­தக் கைதி­களில் பலர் விரும்­ப­வில்லை என்­றும் அவர்­கள் மறுத்­து­விட்­ட­தா­க­வும் அறி­யப்­ப­டு­கிறது. உக்­ரே­னுக்கு எதி­ராக ஆறு மாதங்­க­ளுக்­குப் போரிட்­டால், ரஷ்யா திரும்­பி­ய­தும் அவர்­கள் சிறை

யிலி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வர் என்று சிறைக் கைதி­க­ளுக்கு வேக்­னர் குழு­மம் வாக்­கு­றுதி அளிக்­கும் காணொளி கடந்த வாரம் இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

இது ஒரு­பு­றம் இருக்க, உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வில் வழக்­க­நிலை திரும்­பும் அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன. கியவ்­வில் மெக்

டோனல்ஸ் உண­வ­கங்­கள் நேற்று மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கின. ஆனால் தற்­போ­துக்கு உண­வ­கங்

களுக்­குச் சென்று சாப்­பிட முடி­யாது. உணவு விநி­யோ­கிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மெக்­டோ­னல்ஸ் உண­வ­க­ங்க­ளுக்கு வெளியே உணவு விநி­யோக ஊழி­யர்­கள் நீண்ட வரி­சை­யில் நின்­ற­னர். அக்­டோ­பர் மாதத்­தில் மூன்று மெக்­டோ­னல்ஸ் உண­வ­கங்­கள் முழு­மை­யா­கத் திறக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.