நுக்குவாலோஃபா: டோங்காவின் பிரதான தீவுக்கு வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று கடந்த இரண்டு நாள்களில் எட்டு முறை வெடித்திருப்பதாக அந்நாட்டின் புவியியல் சேவை தெரிவித்துள்ளது.
எரிமலை அருகில் உள்ள கடற்பகுதிகளைத் தவிர்க்கும்படி கப்பல்களை அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல அதன் அருகில் உள்ள வான்வெளியில் பறக்க வேண்டாம் என்று விமானிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாள்களாக அந்த எரிமலை, வானம் நோக்கி மூன்று கிலோமீட்டர் உயரத்துக்கு எரி
மலைக் குழம்பு, புகை, சாம்பல் ஆகியவற்றைக் கக்குவதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், எரிமலை தொடர்பான எச்சரிக்கை நிலையை மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு அதிகாரிகள் மாற்றிஉள்ளனர். நிலைமை மோசம் அடைந்தால் எச்சரிக்கை நிலை சிவப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டு அவசரநிலை அறிவிக்கப்படக்
கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

