தெஹ்ரான்: ஈரானில் பெண்களுக்கான மிகக் கடுமையான ஆடை விதிமுறையைக் கண்காணிக்கும் காவல்துறைப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்ட 22 வயது பெண் மாண்டதை அடுத்து, அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
மருத்துவமனையின் மூன்று நாள்களுக்கு கோமாவில் இருந்த அப்பெண் மரணம் அடைந்தார். இதையடுத்து, அறநெறியை நிலைநாட்டுவதாகக் கூறி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளன. கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்களில் ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜலால் ரஷிடி கூச்சியும் ஒருவர். ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிப்பது அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
"'அறநெறி காவல்துறை' அணுகுமுறை தவறானது. அதனால் எவ்விதப் பலனும் இல்லை. மாறாக, நாட்டுக்கு இழப்பும் சேதமும் ஏற்பட்டுள்ளது.
"இந்த உண்மையைச் சிலர் ஏற்க மறுப்பதே பெரும் பிரச்
சினையாக உள்ளது," என்று திரு கூச்சி கூறினார்.
மாண்ட பெண் குர்திஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்
களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை பாய்ச்சினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

