சிட்டி, ஸ்பர்ஸ், இரண்டுக்கும் இடையே சரியான போட்டி

சிட்டி, ஸ்பர்ஸ், இரண்டுக்கும் இடையே சரியான போட்டி

3 mins read
30efac68-2c52-4d1a-a6cc-75a3daf03a67
லெஸ்டருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸின் ஆறாவது கோலைப் போடும் தென்கொரிய நட்சத்திரம் சொன் ஹியோங் மின் (வலது). சற்று மறக்கப்பட்ட தனது ஆற்றலை நினைவூட்டினார் சொன். படம்: ராய்ட்டர்ஸ் -

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் ஆர்­ச­னல் முத­லி­டத்தை வகித்­

தா­லும் நடப்பு வெற்­றி­யா­ளர் குழு­வான மான்­செஸ்­டர் சிட்­டிக்­கும் டொட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ருக்­கும் இடை­யே­தான் லீக் கிண்­ணத்­துக்­கான போட்டி சூடுபிடிக்­கும் என்ற உணர்வு எழுந்­துள்­ளது. சிட்டி பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் உள்­ளது, ஸ்பர்ஸ் மூன்­றாம் இடத்­தில்.

கடந்த சில வாரங்­க­ளாக சிட்டி நட்­சத்­தி­ரம் எர்­லிங் ஹாலண்­டைப் பற்றி அதி­கம் பேசப்­பட்டு வந்­துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஸ்பர்­ஸின் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் சொன் ஹியோங் மின் இந்­தப் பரு­வம் கோல் போட­வில்லை என்ற பெரிய குறை இருந்­தது.

சுருக்­க­மா­கச் சொன்­னால் சொன் மறக்­கப்­பட்­டி­ருந்­தார்.

ஆனால் விமர்­ச­கர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் லெஸ்­டர் சிட்­டிக்கு எதி­ராக மூன்று கோல்­க­ளைப் போட்டு அசத்­தி­னார் சொன். லெஸ்­டரை 6-2 எனும் கோல் கணக்­கில் வென்­றது ஸ்பர்ஸ்.

நிர்­வாகி என்­டோ­னியோ கொன்­டே­யின் தலை­மை­யில் ஸ்பர்ஸ் லீக் கிண்­ணத்­திற்­குப் போட்டி தரும் என்ற உணர்வு எழ ஆரம்­பித்­துள்ளது. இந்த லீக் பரு­வம் தொடங்கி ஏேழ ஆட்­டங்­கள்­தான் சென்­றுள்­ளன.

எனி­னும், கொன்­டே­யின் தன்­னம்­பிக்கை, வெல்லவேண்­டும் என்ற மன­வு­றுதி இரண்­டும் அவ­ரின் விளை­யாட்­டா­ளர்­க­ளி­ட­மும் இருந்­தால் ஸ்பர்ஸ் லீக் கிண்­ணத்தை வெல்­வது சாத்தியம்.

கடை­சி­யாக 61 ஆண்டு­க­ளுக்கு முன்பு லீக் கிண்­ணத்தை வென்­றது ஸ்பர்ஸ்.

எனி­னும், தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக லீக் கிண்­ணத்தை வெல்­லும் இலக்­கு­டன் அபா­ர­மாக ஆடி வந்­துள்­ளது சிட்டி. யார் சரி­யாக ஆடா­விட்­டா­லும் ஹாலண்­டின் கோல் மழை தொடர்ந்து பொழிந்­தால் சிட்­டி­யைத் தடுப்­பது சிர­மம்­தான்.

ஹாலண்ட் கோல் போடு­வ­தைத் தடுப்­பதே சிட்­டியை வெல்­ல­வி­டா­மல் செய்­வ­தற்­கான ரக­சி­யம். ஆனால் அதைச் செய்­வது சாதா­ர­ண­மன்று.

சென்ற வாரம் லீக்­கில் சிட்­டி­யும் ஸபர்­சும் மோத­வி­ருந்­தன. எலி­ச­பெத் அர­சி­யார் இறந்­த­தால் பிரிட்­ட­னில் காற்­பந்து ஆட்­டங்­கள்

ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி அந்த ஆட்­டத்­தில் ஸ்பர்ஸ் வென்­றி­ருந்­தா­லும் ஆச்­ச­ரி­யம் இல்லை. பெரிய அணி­க­ளை­யும் நட்­சத்­தி­ரங்­க­ளை­யும் எளிதா­கத் தடுக்­கத் தனது குழு­வைத் தயார்­செய்­யும் ஆற்­றல் கொன்­டேக்கு உண்டு.

அதற்­காக வெற்றி ஸ்பர்­சுக்கே என்­றும் சொல்­லி­வி­ட­ மு­டி­யாது. அந்த ஆட்­டம் மிக­வும் விறு­வி­றுப்­பா­ன­தாக அமைந்­தி­ருக்­க­லாம்.

கடந்த வாரம் வுல்­வர்­ஹேம்ப்­டன் வாண்­ட­ரர்ஸ் குழுவை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது சிட்டி.

ஸ்பர்ஸ், சிட்டி இரண்­டை­யு­ம்விட ஒரு புள்ளி அதி­க­மா­கப் பெற்று பட்­டி­ய­லில் முத­லி­டம் வகிக்­கும் ஆர்­ச­னல் கடை­சி­வரை லீக் கிண்­ணத்­திற்­குப் போட்டி தருமா என்­பது தெரி­ய­வில்லை.

அபா­ர­மாக விளை­யா­டி­வந்த ஆர்­ச­னல் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு லீக்­கில் மான்­செஸ்­டர் யுனை­டெட்­டி­டம் தோல்­வி­யுற்­றது. அத­னால் பெரிய குழுக்­க­ளுக்கு எதி­ராக ஆர்­ச­னல் சிறப்­பாக விளை­யா­டுமா என்ற கேள்வி நில­வு­கிறது.

எனி­னும், தற்­போ­தைக்கு

அந்­தத் தோல்­வி­யி­லி­ருந்து நன்கு மீண்டு வந்­துள்­ளது, பிரென்ட்­ஃபர்ட்டை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்ற ஆர்­ச­னல். பரு­வம் தொடங்­கி­ய­போது யுனை­டெட்­டையே 4-0 எனும் கோல் கணக்­கில் திக்­கு­முக்­கா­டச் செய்த குழு பிரென்ட்­ஃபர்ட்.

இதற்கு முன்பு வந்த பரு­வங்­களில் விளை­யா­டி­யதை வைத்­துப் பார்க்­கும்­போது இந்­தப் பரு­வத்­தில் ஆர்சனல் தடு­மா­றும் என்று சொல்­ல­லாம்.

அதே வேளை­யில் நிர்­வாகி மிக்­கெல் அர்­டெட்­டா­வின் தலை­மை­யில் ஆர்­ச­னல் படிப்­ப­டி­யாக முன்­னேறி வந்­துள்­ள­தால் இம்­முறை அது தொடர்ந்து சிறப்­பாக ஆட­வும் வாய்ப்­புள்­ளது.

பிரிட்­ட­னின் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் இறு­திச் சடங்­கிற்­குப் பல காவல்­துறை, பாது­காப்பு அதி­

கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­ட­தால் கடந்த வாரம் சில பிரி­மி­யர் லீக் ஆட்­டங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. அத­னால் லிவர்­பூல், செல்சி, மான்­செஸ்­டர் யுனை­டெட் உள்­ளிட்ட குழுக்­கள் விளை­யா­ட­வில்லை. தனது நிர்­வா­கியை செல்­சி­யி­டம் இழந்த பிரைட்­ட­னும் ஆட­வில்லை.