(காணொளி) சீனாவில் மாபெரும் கொவிட்-19 தனிமைப்படுத்துதல் நிலையம்

(காணொளி) சீனாவில் மாபெரும் கொவிட்-19 தனிமைப்படுத்துதல் நிலையம்

1 mins read
30f4ff03-d17e-46b0-b522-bbb83ee49731
படம்: டோயின -
Google News Preferred Icon

சீனாவில் மாபெரும் கொவிட்-19 தனிமைப்படுத்துதல் நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் 14,000 பேர் வரை தனிமைப்படுத்த வசதி உள்ளது.

இந்த நிலையத்தை ஆள்ளில்லா வானூர்தி மூலம் எடுக்கப்பட்ட படங்கள் சீன சமூக ஊடகங்களில் அண்மையில் பகிரப்பட்டன.

வரிசை வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட கட்டடங்கள் பார்ப்பதற்கு கப்பல் கொள்கலன்கள் போல் காட்சியளிக்கின்றன. ஒரு வனத்தை அழித்து இந்த நிலையம் கட்டப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையத்தின் கட்டுமான பணி ஏப்ரல் மாதத்தில் தொடங்கியதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையம் குவான்கான் நகரில் அமைக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் பலர் நம்புகின்றனர்.

சீனா கொவிட்-19 தொற்றை அறவே அனுமதிக்காத அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ஒரு வாரம் அனுப்பப்படுகின்றனர்.