கோழியை சளிமருந்தில் சமைக்கும் டிக்டாக் சவால்

கோழியை சளிமருந்தில் சமைக்கும் டிக்டாக் சவால்

1 mins read
ccbca888-172d-4fbe-a736-ab68c57ae0d3
படம்: டிக்டாக் -

கோழியை ஒருவகை சளி மருந்தில் சமைக்கும் சவால் டிக்டாக் தளத்தில் பிரபலமாகி வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோழியை மருந்தில் சமைக்கும்போது இவ்விரண்டு பொருள்களின் தன்மை மாறும். அதை சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அமைப்பு தெரிவித்தது. அப்படியே கோழியை சாப்பிடாவிட்டாலும், அதை சமைக்கும்போது ஏற்படும் நீராவியை நுகரும்போதும் அதிக அளவில் மருந்து உடலுக்குள் செல்லும் சாத்தியம் உள்ளது. இதிலும் ஆபத்து இருப்பதாக அமைப்பு எச்சரித்தது.

சமூக தளங்களில் வரும் சவால்களை மக்கள் கண்மண் தெரியாமல் பின்பற்றுகின்றனர். முன்னதாக சலவை செய்யும் சவுக்காரத்தை குடிப்பது, இருமல் மருந்தை அளவுக்கு அதிகமாக குடிப்பது போன்ற சவால்களை மக்கள் சவாலாக எடுத்து செய்தனர். இத்தகைய சலால்களை தங்களது நண்பர்கள் செய்வதால், அதை கண்மூடித்தனமாக பல இளையர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இதுபோன்ற சவால்களுக்கு தங்கள் தளத்தில் இடமில்லை என்று டிக்டாக் கூறியுள்ளது. மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலையும் நிறுவனம் ஊக்குவிக்காது என்று அது குறிப்பிட்டது.