ஓணம் பண்டிகைக்கு மலர்களால் பூகோலம் போட்டு அலங்கரிப்பது பாரம்பரியம். ஆனால் மலர்களே பூக்காத இடத்தில் எதை வைத்து பூகோலம் போடுவது?
அண்டார்டிகாவில் வாழும் சில இந்தியர்கள் வித்தியாசமான முறையில் பூகோலம் போட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
பனிக்கட்டியில் மலர் வடிவத்தை செதுக்கி அதற்குக் கீழ் 'அண்டார்டிகாவில் ஓணம்' என்று எழுதி நூதனமான முறையில் பண்டிகையை கொண்டாடினர் இங்கு வாழும் இந்தியர்கள்.
இந்த காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. இந்தியர்கள் எங்கு சென்றாலும் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதை தடுக்கமுடியாது என்று அவர் பதிவிட்டிருந்தார்.


