தெஹ்ரான்: ஈரானில் பெண்களுக்கான மிகக் கடுமையான ஆடை விதிமுறையைக் கண்காணிக்கும் காவல்துறைப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்ட 22 வயது பெண் மாண்டதை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இவற்றில் மேலும் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மரண எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருப்பதாக ஆர்வலர் குழு ஒன்று நேற்று கூறியது.
பதினைந்து நகர்களுக்குப் பரவிய ஆர்ப்பாட்டங்களில் ஏறக்குறைய 1,000 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர்.

