மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் நஜிப் சிறைக்கு திரும்புவார்

மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் நஜிப் சிறைக்கு திரும்புவார்

1 mins read
5f435e70-f388-4ce9-a48a-b95b2193924c
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக்­கின் ஆரோக்­கி­யத்­தைக் கண்­கா­ணிக்­க­வும் அவ­ருக்­குக் கூடு­தல் சிகிச்சை அளிக்­க­வும் அவர் செராஸ் மறு­வாழ்வு மருத்­து­வ­மனை­யில் அனு­மதிக்­கப்­பட்டு உள்­ள­தாக சிறைச்­சா­லைத் துறை தெரி­வித்­துள்­ளது.

தமக்கு உடல்­ந­லம் சரி­யில்லை என்று நஜிப் கூறி­ய­தைத் தொடர்ந்து, மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­காக அவர் கோலா­லம்­பூர் மருத்­து­வ­மனைக்கு அனுப்­பப்­பட்­ட­தாக சிறைச்­சா­லைத் துறை கூறி­யது.

அதன் பின்­னர், கடந்த திங்கள்­கிழமை அவர் செராஸ் மறு­வாழ்வு மருத்­து­வ­ம­னைக்கு மாற்றப்­பட்­டார்.

"நஜிப்­புக்கு சிகிச்சை அளித்து முடித்து அவர் மருத்­து­வ­ம­னை­யில் இ­ருந்து வெளி­யே­ற­லாம் என்று மருத்­து­வர்­கள் அறி­வித்­த­வு­டன் அவர் காஜாங் சிறைக்கு அழைத்துச் செல்­லப்­ப­டு­வார்," என்று சிறைச்­சா­லைத் துறை நேற்று தெரி­வித்­தது.