சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கு தெற்கே உள்ள டாஸ்மேனியா தீவின் மேற்கு கடற்கரையில் ஏறக்குறைய 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது நேற்று கண்டறியப்பட்டது. அவற்றில் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதாகத் தெரிவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்தனை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் நிபுணர்கள் திமிங்கலங்களை மீட்க சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: ஏஎஃப்பி

