தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எய்ட்ஸ், காசநோய், மலேரியாவுக்கு எதிராகப் போராட 14.25 பி. டாலர்

1 mins read
4976385d-32dd-4cef-8149-992a3e8b4c52
நோய்களுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்த நிதி மிகவும் முக்கியம் என்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். படம்: ஏஎஃப்பி -

எயிட்ஸ், காசநோய், மலேரியா ஆகியவற்றுக்கு எதிராகப் போராட உலகளவிலான நிதித் தொகை 14.25 பில்லியன் டாலரை (20.20 பில்லியன் வெள்ளி) எட்டியுள்ளது.

மரணம் விளைவிக்கக்கூடிய இந்நோய்களுக்கு எதிரான போராட்டம் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் பின்தங்கிப்போனது.

இப்போது உலகத் தலைவர்கள் அந்த முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளனர்.

இந்த மூன்று நோய்களுக்கு எதிராகப் போராட இந்த நிதி மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபை கூடியபோது இதன் தொடர்பில் தனியாக நடைபெற்ற சந்திப்பை திரு பைடன் நடத்தினார்.

"கூடுதலாக 20 மில்லியன் உயிர்களை இந்த முதலீடு காப்பாற்றும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை 64 விழுக்காடு குறைக்கும்," என்று திரு பைடன் குறிப்பிட்டார்.