கடற்கரையில் மாண்டுகிடந்த 200 திமிங்கிலங்கள்

கடற்கரையில் மாண்டுகிடந்த 200 திமிங்கிலங்கள்

1 mins read
f70d6fdc-9ba8-4b35-ba00-f979af5730f2
மாண்டுகிடந்த கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள். படம்: ஏஎஃப்பி -

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் சுமார் 200 'பைலட் வேல்' வகை திமிங்கிலங்கள் ஒரு கடற்கரையில் மாண்டுகிடந்தன.

கரை ஒதுங்கிய பிறகு அவற்றுக்கு இந்நிலை உருவானது.

கடற்கரையில் இருந்த கிட்டத்தட்ட 230 திமிங்கிலங்களில் 30 மட்டுமே உயிருடன் இருப்பதாக மாநில வனவிலங்குச் சேவைகள் தெரிவித்தன.

'ஓஷன் பீச்' கடற்கரையில் பல திமிங்கிலங்கள் மாண்டுகிடப்பதைக் கீழ்நோக்கி எடுக்கப்பட்ட படங்கள் காண்பித்தன.