ஹாங்காங்கில் கொவிட்-19 தனிமை உத்தரவு விலக்கப்படலாம்

ஹாங்காங்கில் கொவிட்-19 தனிமை உத்தரவு விலக்கப்படலாம்

1 mins read
fb7e9779-d80c-4a33-9b4e-08cc6024a755
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங் செல்லும் பயணிகளுக்கு கொவிட்-19 தனிமை உத்தரவு விரைவில் விலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வரும் நாள்களில் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

உலகளாவிய நிதி மையம் என்ற தனது நிலையைப் பாதுகாக்க ஹாங்காங் அவ்வாறு செய்யக்கூடும்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் கட்டுப்பாட்டுத் தளர்வு குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிட ஆரம்பிக்கக்கூடும் என்று ஹாங்காங் அரசியல்வாதிகளில் ஒருவரான திரு மைக்கேல் டியென் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் நடுப்பகுதியிலிருந்து கட்டுப்பாட்டுத் தளர்வு நடப்புக்கு வரலாம் என்று தொலைபேசிவழி அளித்த பேட்டியில் அவர் கூறினார்.