புட்டின் முடிவை எதிர்த்து ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம்; 1,300 பேர் கைது

புட்டின் முடிவை எதிர்த்து ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம்; 1,300 பேர் கைது

1 mins read
12459792-c7c2-4db3-8be1-9ba56c4372ef
ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

உக்ரேன் போரில் ஈடுபடாதிருந்த பொதுமக்களைக் களமிறக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் முடிவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1,300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்புக் குழு ஒன்று இதைத் தெரிவித்தது.

தலைநகர் மாஸ்கோவில் குறைந்தது 502 பேரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 524 பேரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ராணுவ அனுபவம் இருக்கும் 300,000 பேரைப் போரில் ஈடுபடுத்தி கூடுதல் படைகளைத் திரட்டப்போவதாக திரு புட்டின் புதன்கிழமையன்று (21 செப்டம்பர்) அறிவித்திருந்தார்.