அக்டோபரில் பயணிகளுக்கான கொவிட்-19 தனிமை உத்தரவை விலக்க தைவான் எண்ணம்

அக்டோபரில் பயணிகளுக்கான கொவிட்-19 தனிமை உத்தரவை விலக்க தைவான் எண்ணம்

1 mins read
d72997e1-c3e2-4eb2-ba43-9a86b45035b6
தைப்பேயில் உள்ள உணவு விநியோகச் சந்தை ஒன்று. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட படம்: கோப்புப் படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

தைவான் இவ்வாண்டு அக்டோபர் மாத நடுப்பகுதியிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான கட்டாய கொவிட்-19 தனிமை உத்தரவை விலக்கத் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வாக்கில் கட்டாய தனிமை உத்தரவு உட்பட இதர கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தைவான் அரசாங்கம் வியாழக்கிழமையன்று (22 செப்டம்பர்) தெரிவித்தது.

ஆசியாவில் பல நாடுகள் கட்டுப்பாடுகளைப் பெரிய அளவில் தளர்த்தி அல்லது முற்றிலும் விலக்கியபோதும் தைவான் சில கட்டு்பிபாடுகளைத் தொடர்ந்து செயல்படுத்திவந்தது.