வருங்காலத்தில் நிலநடுக்கம் உலுக்கினால் இடிபாடுகளில் சிக்கியோருப்போரை அடையாளங்காண இயந்திரம் பொருத்தப்பட்ட கரப்பான்கள் ஈடுபடுத்தப்படலாம்.
இத்தகைய பணிகளில் ஈடுபடக்கூடிய 'சைபோர்க்' கரப்பான்களை ஜப்பானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் ஒரு கருவியைக் கொண்டு கரப்பானை இயக்கமுடியும்.
இதற்கு வகைசெய்யும் 'ரைக்கன்' எனும் ஜப்பானிய ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கென்ஜிரோ ஃபுக்குடாவும் அவரது குழுவினரும் கரப்பானின் உடலில் பொருத்தக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
அபாயகரமான இடங்களை எந்திர மனிதர்களையும்விட எளிதில் சென்றடையக்கூடிய 'ரோபோ' பூச்சிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரக்கூடும்.

