‘ஃபேட் லெனர்ட்’ பிடிபட்டார்

பெட்­டா­லிங் ஜெயா: அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து தப்பி ஓடிய ‘ஃபேட் லெனர்ட்’ என்று அழைக்­கப்­படும் லெனர்ட் கிளென் ஃபிரான்­சிஸ் வெனி­சு­வே­லா­வில் பிடி­பட்­டுள்­ளார்.

அமெ­ரிக்கக் கடற்­படை அதி­கா­ரி­க­ளுக்கு 35 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் பெறு­மா­ன­முள்ள லஞ்­சம் கொடுத்து ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­ற­தாக மலே­சி­ய­ரான 58 வயது ஃபிரான்சிஸ் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தில் உள்ள சான் டியேகோ நக­ரில் வீட்­டுக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

அவ­ருக்கு எதி­ராக அமெ­ரிக்க நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்க இருந்த நிலை­யில், இம்­மா­தம் 4ஆம் தேதி­யன்று அவர் கம்பி நீட்­டி­னார்.

அவ­ரது நட­மாட்­டத்­தைக் கண்­கா­ணிக்க அவ­ரது கணுக்­கா­லில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சாத­னத்தை ஃபிரான்­சிஸ் வெட்டி எறிந்­த­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், வேறொரு நாட்­டுக்­குச் செல்ல இருந்த விமா­னத்­தில் அவர் ஏற முயன்­ற­போது வெனி­சு­வேலா அதி­கா­ரி­கள் அவ­ரைக் கைது செய்­த­னர்.

ஃபிரான்­சிஸ் குறித்த தக­வலை அனைத்­து­ல­கக் காவல்­து­றை­யும் அமெ­ரிக்க மார்­ஷல் பிரி­வும் தக­வல் அளித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. ஃபிரான்­சிஸ் தமது மக­னு­டன் வெனி­சு­வே­லா­வில் இருப்­ப­தாக செய்­தி­யா­ளர்­கள் டோம் ரைட்­டும் பிராட்லி ஹோப்­பும் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

வீட்­டுக்­கா­வ­லி­லி­ருந்து ஃபிரான்­சிஸ் தப்பி ஓடி­யதை அடுத்து, அவர் வெனி­சு­வே­லா­வில் இருப்­ப­தா­கத் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக இரு­வ­ரும் தெரி­வித்­த­னர்.

அதை­ய­டுத்து, ஃபிரான்­சி­சுக்கு எதி­ரான பிடி இறு­கி­யது.

ஃபிரான்­சி­சின் இருப்­பி­டம் குறித்து தக­வல் அளித்து அவ­ரது கைதுக்­குக் கார­ண­மாக இருப்­ப­

வ­ருக்கு 40,000 அமெ­ரிக்க டாலர் ($56,000) வெகு­மதி வழங்­கப்­படும் என்று அமெ­ரிக்க மார்­ஷல் பிரிவு அறி­வித்­தி­ருந்­தது.

மலே­சி­யா­வில் இருக்­கும்

அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தில் நடை­பெற்ற அமெ­ரிக்­கச் சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொள்ள ஃபிரான்­சி­சுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டதை அடுத்து, அவ­ருக்­கும் அமெ­ரிக்­கக் கடற்­படை அதி­கா­ரி­கள் சில­ருக்­கும் அறி­மு­கம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!