மெக்சிகோவில் நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள்

மெக்சிகோவில் நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள்

1 mins read
2653b76a-23b3-4f56-9762-0fcefb60e253
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியில் வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள். படம்: ஏஎஃப்பி -

மெக்­சிகோ சிட்டி: மெக்­சி­கோவை நேற்று அதி­காலை ரிக்­டர் அள­வில் 6.8 நில­ந­டுக்­கம் உலுக்­கி­யது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று மெக்­சி­கோ­வில் ஏற்­பட்ட சக்­தி­

வா­ய்ந்த நில அதிர்­வின் கார­ண­மாக இரண்டு பேர் மாண்­ட­னர், நூற்­றுக்­க­ணக்­கான கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன.

இந்­நி­லை­யில், நேற்று நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டதை அடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு தூக்­கத்­தி­லி­ருந்து திடுக்­கிட்டு எழுந்த மக்­கள் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.

நிலநடுக்கம் காரணமாக மரணம், சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று மெக்சிகோ சிட்டி மேயர் கிலோடியா ஷைன்பாவ்ம் தெரிவித்தார்.