கொழும்பு: இலங்கையின் வருடாந்திர பணவீக்க விகிதம் கடந்த மாதம் 70.2 விழுக்காட்டை
எட்டியது.
ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், அந்நாட்டில் உணவுப் பொருள்களின் விலை 84.6 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகின்றன.
22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கை இவ்வாண்டு மிகக் கடுமையான பொருளியல் நெருக்கடிநிலையை எதிர்கொண்டு வருகிறது.
உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களில் தட்டுப்பாடு ஏற்பட,
அரசியல் நெருக்கடிநிலையும் ஏற்பட்டது. நாட்டின் அவலநிலைக்கு இதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தின் முறையற்ற, தரமற்ற நிர்வாகமே காரணம் என்று இலங்கை
மக்கள் கொதித்தெழுந்தனர்.
இதனால் அப்போது இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பி ஓடினார்.
ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவியை ஏற்றதும் அவர் மீண்டும் இலங்கை திரும்பினார்.

