புத்ராஜெயா: பொதுத் தேர்தலை நடத்த பருவமழைக்காலம் உகந்ததல்ல என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
பருவமழைக்காலத்தில் தேர்தலை நடத்தினால் அது தள
வாடப் பிரச்சினையை மட்டுமின்றி சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று அவர்
தெரிவித்தார்.
பொதுவாக வெள்ள அபாயம் உள்ள மாதங்களில் தேர்தலை அரசாங்கம் நடத்துவதில்லை என்று திரு கைரி கூறினார்.
"பருவமழைக்காலத்தின்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
களுக்கு அதிக மனிதவளம் தேவைப்படும்.
"பாதிக்கப்பட்டுள்ள பகுதி
களிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது, துயர்துடைப்பு மையங்களை நிர்வகிப்பது போன்ற பணிகளில் பலர் ஈடுபடுத்தப்
படுவர்.
"அதனால் வெள்ளம் ஏற்படும் காலத்தில் தேர்தலை நடத்துவது பல சிரமங்களை ஏற்படுத்தும். மேலும், பள்ளிகளும் வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படும்," என்று மலேசிய சுகாதார அமைச்சு நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில்
அமைச்சர் கைரி கூறினார்.

