கோலாலம்பூர்: மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையின்கீழ் செயல்படும் பெர்சத்து கட்சி கடுமையான சவால்களை எதிர்நோக்குகிறது.
மலேசியர்களின் ஆதரவு, அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற முடியாமல் திரு முகைதீன் சிரமப்
படுகிறார்.
பெர்சத்து கட்சியுடன் கூட்டணி அமைக்க வேறு கட்சிகள் முன்வராத நிலையில், அக்கட்சியின் எதிர்காலம் குறித்து
சந்தேகம் எழுந்துள்ளது.
பெர்சத்து கட்சி ஆறு ஆண்டு களுக்கு முன்பு தொடங்கியது.
ஊழல் தடுப்பைத் தொடர்ந்து முன்னிறுத்தி பிரசாரம் செய்து வரும் பெர்சத்து கட்சி, அம்னோவுக்குப் பதிலாக ஆட்சி அமைக்க இலக்கு கொண்டுள்ளது.

