கோலாலம்பூர்: கம்போடியாவில் உள்ள இணையக் குற்றக் கும்பலிடம் சிக்கிய 15 பேரை மலேசிய அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
அந்த 15 பேரும் மலேசியாவுக்குத் திரும்பிவிட்டதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. தென்கிழக்காசிய நாடுகளில் இதே போன்ற கும்பல்களிடம் சிக்கித் தவிக்கும் மலேசியர்களைக் காப்பாற்றி சொந்த நாட்டுக்குத் திருப்பிக் கொண்டுவரும் நட
வடிக்கைகளை மலேசிய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வேலை மோசடிக் கும்பல்களிடம் சிக்கியிருக்கும் மலேசியர்கள் தொடர்பாக 301 புகார்கள் கிடைத்திருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு கூறியது.

