புனித மதீனா நகரில் நிலத்தில் தங்கமும் பித்தளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.
மதினா வட்டாரத்தில் உள்ள அபா அல்-ராஹாவில் தங்கமும் வாடி அல்-ஃபாரா வட்டாரத்தில் நான்கு இடங்களில் பித்தளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் நிலவியல் ஆய்வு நிலையம் இதைத் தெரிவித்ததாக அல் அரேபியா செய்தித்தாள் கூறியது.
இதன்மூலம் புதிய அனைத்துலக முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
தங்கம், பித்தளை கண்டுபிடிப்பால் 533 மில்லியன் அமெரிக்க டாலர் (759 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீட்டைப் பெறலாம் என்றும் 4,000 வேலைகளை உருவாக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
புதிய கண்டுபிடிப்பால் சவூதி அரேபியாவில் சுரங்கத்தொழில் செழிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.


