புகழ்பெற்ற பொருளியல் நிபுணர் நுரியெல் ரோபினி இந்த ஆண்டு கடைசியில் "மிகக் கடுமையான, மோசமான, நீண்டகால பொருளியல் நெருக்கடி" ஏற்படும் என்று முன்னுரைத்துள்ளார்.
அமெரிக்காவிலும் உலக அளவிலும் அந்த பொருளியல் நெருக்கடி உண்டாகும் என்றும் அது 2023 முழுமைக்கும் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரு ரோபினி, கடந்த 2007ஆம், 2008ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று முன்னுரைத்தவர் ஆவார்.
அமெரிக்காவின் 500 பெரிய நிறுவனங்களின் பங்குகளைக் கண்காணிக்கும் எஸ் அண்ட் பி500 (S&P500) குறியீடு பெரும் சரிவைச் சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பெரும் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களும் தனியார் வங்கிகளும் குடும்பங்களும் நாடுகளும் வீழ்ச்சி அடையும் என்று அவர் எச்சரித்தார்.

