பேங்காக்: கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக நாடு தழுவிய அவசரநிலையை தாய்லாந்து முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறது. கொவிட்-19 கிருமியின் தீவிரத்தை அபாயகரமானதிலிருந்து கண்
காணிக்கப்பட வேண்டிய பிரிவுக்கு தாய்லாந்தின் சுகாதார அமைச்சு குறைத்துள்ளது.
அவசரநிலையை இம்மாதம் 30ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டுவர கொவிட்-19 கிருமிப் பரவலைக் கண்காணிக்கவும்
கட்டுப்படுத்தவும் அமைக்கப்பட்ட நிர்வாக மையம் இணக்கம் தெரிவித்திருப்பதாக தாய்லாந்து சுகாதார அமைச்சர் சதிட் பிட்டுடேச்சா தெரிவித்தார். பல்வேறு அமைப்பு
களின் ஒப்புதலின்றி கிருமிப் பரவல் தடுப்புத் திட்டங்களை தாய்லாந்து அரசாங்கம் தங்குதடைஇன்றி நடைமுறைப்படுத்த அவசரநிலை உதவியது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தாய்லாந்தில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கிருமித்தொற்று காலத்தில் பயணம், வர்த்தகங்கள் ஆகியவை தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவற்றை நீக்க தேவையான நட
வடிக்கைகளை தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. கொவிட்-19 கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்ப
தாலும் இந்த முடிவு எடுக்கப்
பட்டுள்ளது. அண்மைக் காலமாக கொவிட்-19 கட்டுப்பாடுகளை தாய்லாந்து படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. இதன்மூலம் சுற்றுப்
பயணத்துறையை அதிகம் சார்ந்திருக்கும் அந்நாட்டுக்குக் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டுப் பயணிகள் பலர் சென்றனர்.
இந்நிலையில், அவசரநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை வெகுவாக மேம்படும். இது அந்நாட்டின் பொருளியல் மீட்சிக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதத்திலிருந்து தாய்லாந்துக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழைக் காட்டத் தேவைஇல்லை. இவ்வாண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்கும் இம்மாதம் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தாய்லாந்துக்குச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை
ஏறத்தாழ 5.26 மில்லியனாகப்
பதிவானது.
கடந்த ஆண்டு வெறும் 427,869 சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றனர்.

