செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
18dfb07a-a06d-4030-96e7-37e0260a2857
-

சிங்கப்பூருக்காக ஹசன் சன்னியின் 100வது ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் சிங்கப்பூர் காற்பந்துக் குழு இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டம் வியட்னாமில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் சிங்கப்பூருக்காக கோல்காப்பாளர் ஹசன் சன்னி களமிறங்கும் 100வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

38 வயது ஹசன் சன்னியை சேர்க்காமல் இதுவரை சிங்கப்பூருக்காக குறைந்தது 100 ஆட்டங்களில் 14 காற்பந்து ஆட்டக்காரர்கள் களமிறங்கியுள்ளனர்.

நாட்டுக்கான 100வது ஆட்டத்தில் களமிறங்குவது தமக்குக் கிடைக்கும் கௌரவம் என்று ஹசன் சன்னி தெரிவித்தார்.

சூடுபிடிக்கும் நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி

ஸாகிரேப்: ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் டென்மார்க்கை 2-1 எனும் கோல் கணக்கில் குரோவேஷியா தோற்கடித்துள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் வேல்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து சிறப்பாக விளையாடி 2-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.