வாக்கெடுப்பு, ஆள்சேர்ப்பில் ரஷ்யா தீவிரம்; புட்டினின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

கியவ்: உக்­ரே­னி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட பகு­தி­களில் ரஷ்யா வாக்­கெ­டுப்பு நடத்­து­கிறது. வாக்­

கெ­டுப்பு நேற்று தொடங்­கி­யது.

கைப்­பற்­றப்­பட்ட பகு­தி­கள் ரஷ்­யா­வில் சேர அங்­குள்ள மக்­கள் விரும்­பு­கி­றார்­களா இல்­லையா என்­பதை தெரிந்­து­கொள்ள

வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கிறது.

கிழக்கு டொனெட்ஸ்க், லுஹான்ஸ் பகு­தி­கள், தென்­கெர்­சோன், ஸாப்­போ­ரி­சியா ஆகிய இடங்­களில் நடத்­தப்­படும் இந்த வாக்­கெ­டுப்பை உக்­ரே­னுக்கு ஆத­ர­வாக இருக்­கும் மேற்­கத்­திய நாடு­கள் ஏற்க மறுத்து, கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. ரஷ்யா நடத்­தும் இந்த வாக்­கெ­டுப்பு ஒரு மோசடி என்று அவை வர்­ணித்­துள்­ளன.

இந்த வாக்கெடுப்பு ரஷ்யாவுக்குச் சாத­க­மா­கத்­தான் அமை­யும் என்று அர­சி­யல் கண்­கா­ணிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இத­னால் உக்­ரே­னுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யி­லான போர் மோச­ம­டை­யும் என்று அவர்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

ரஷ்ய அதி­ப­ர் விளாடிமிர் புட்டினின் இந்த நட­வ­டிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது என்­றும் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிலிங்­கன் தெரி­வித்­தார்.

ரஷ்யா நடத்­தும் வாக்­கெ­டுப்பு நேற்று தொடங்கி வரும் செவ்­வாய்க்­கி­ழமை வரை நடை­பெ­றும் என்று அறி­யப்­ப­டு­கிறது.

உக்­ரே­னுக்­குச் சொந்­த­மான

பகு­தி­களில் இருக்­கும் மக்­கள்­தொ­கை­யில் 15 விழுக்­காட்­டி­னர்

மட்­டுமே வாக்­க­ளிப்­பர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆள்­சேர்ப்­பில் தீவி­ரம்

இதற்­கி­டையே, உக்­ரே­னுக்கு எதி­ரான போரில் கள­மி­றங்க ஆள் சேர்க்­கும் நட­வ­டிக்­கை­களை ரஷ்யா தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

போரிட விரும்­பா­மல் ரஷ்ய ஆண்­கள் பலர் பிற நாடு­க­ளுக்­குத் தப்­பி ஓடி அங்கு அடைக்­க­லம் நாடு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ரஷ்ய ராணு­வத்­தில் வலுக்­கட்­டா­ய­மா­கச் சேர்க்­கப்­பட்டு போர்க்­

க­ளத்­துக்கு அனுப்­பப்­ப­டக்­கூ­டும் என்ற அச்­சம் ரஷ்­யர்­கள்

பல­ரி­டையே நில­வு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

ரஷ்­யா­வுக்­குச் சொந்­த­மான விமா­னச் சேவை­கள், விமான நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் பணி­பு­ரி

­ப­வர்­களை ராணு­வத்­தில் சேர்க்­கும் பணி­கள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாகவும் நம்­பப்­ப­டு­கிறது.

இதற்­கான உத்­த­ர­வுக் கடி­தங்­கள் ஊழி­யர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக ரஷ்ய ஊட­கம் தெரி­வித்­துள்­ளது. ஒவ்­வொரு நிறு­

வ­னத்­தி­லி­ருந்தும் 50லிருந்து 80 விழுக்­காட்டு ஊழி­யர்­கள் ராணு­வத்­தில் சேர்க்­கப்­ப­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ரஷ்­யா­வின் ஏரோ­ஃபி­ளோட் விமா­னச் சேவை­யின் ஊழி­யர்­களில் 50 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோர் ராணு­வத்­தில் சேர்க்­கப்­ப­டக்­கூ­டும் என்று அந்த விமா­னச் சேவைக்கு நெருக்­க­மான ஒரு­வர் செய்­தி­

யா­ளர்­க­ளுக்­கு­த் தக­வல் அளித்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து தக­வல் தெரி­விக்க ஏரோ­ஃபி­ளோட் மறுத்­து­விட்­டது.

இதற்­கி­டையே, தக­வல் தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் சில­ரும் அர­சாங்­கத்­துக்­குச்­ சொந்­த­மான ஊட­கங்­களில் பணி­பு­ரி­யும் செய்­தி­யா­ளர்­களும் வங்கி அதி­கா­ரி­களும் உக்­ரே­னுக்கு எதி­ரா­கப் போரிட ராணு­வத்­தில் சேர்க்­கப்­பட மாட்­டார்­கள் என்று ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு நேற்று அறி­வித்தது.

இதற்­கி­டையே, உக்­ரேன் மீது படை­யெ­டுக்­கும் சூழ்­நி­லைக்கு அதி­பர் புட்­டின் தள்­ளப்­பட்­டா­ர் என்று இத்­தா­லி­யின் முன்­னாள் பிர­த­மர் சில்­வியோ பெர்­லுஸ்­கோனி தெரி­வித்­துள்­ளார்.

"உக்­ரே­னுக்கு எதி­ராக சிறப்பு நட­வ­டிக்கை எடுக்க புட்­டி­னுக்கு அவ­ரது கட்­சி­யி­னர், அமைச்­சர்­கள் ஆகி­யோர் நெருக்­கு­தல் அளித்­த­னர்," என்று திரு பெர்­லுஸ்­கோனி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!