கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் அடுத்த மாதம் கூடும்போது புகையிலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற அந்நாடு இலக்கு கொண்டுள்ளது.
2007ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தோர் புகைப்பிடிப்பது, 'வேப்பிங்' பழக்கம் கொண்டிருப்பது ஆகியவற்றுக்குத் தடை விதிக்க விரும்புகிறார் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய சட்டம் தனிநபர் உரிமையை மீறுவதாக விமர்
சனங்கள் எழுந்ததை அடுத்து, நாடாளுமன்றச் சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அது கடந்த ஆகஸ்ட் மாதம் விடப்பட்டது.

