ஹாங்காங்: ஹாங்காங்கிற்கு அடுத்த திங்கட்கிழமை முதல் செல்பவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தும் அணுகு முறையை ஹாங்காங் நடை
முறைப்படுத்தியது.
இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஹாங்காங் மக்களும் வர்த்தகர்களும் அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், நாளை மறு
நாளிலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகள் நேரடியாக அவர்களது வீட்டிற்கு அல்லது ஹோட்டலுக்குப் போகலாம்.
இருப்பினும், தங்கள் உடல்
நலத்தை அவர்கள் மூன்று நாள்
களுக்குக் கண்காணிக்க
வேண்டும்.

