கம்போடிய படகு விபத்து; பலரைக் காணவில்லை

கம்போடிய படகு விபத்து; பலரைக் காணவில்லை

1 mins read
6a2bc710-3ac1-4b52-8541-27e4c53920ab
-

நோம் பென்: கம்­போ­டி­யா­வில் நேர்ந்த படகு விபத்­தில் ஆகக் கடைசி நில­வ­ரப்­படி சீனா­வைச் சேர்ந்த குறைந்­தது 10 பேரை இன்­ன­மும் காண­வில்லை என்று சம்­பவம் நிகழ்ந்த பகு­தி­யின் மாநிலத்தின் அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

சிஹா­னுக்­வில் நக­ரைத் தாண்­டிய தீவு­க­ளுக்கு அருகே படகு ஒன்று கடந்த வியாழக்கிழமையன்று மூழ்­கி­யது. பட­கில் 40க்கும் அதி­க­மா­னோர் இருந்­த­னர்.

குறைந்­தது ஓர் உடல் கண்­டெடுக்­கப்­பட்­டது. வியட்­நா­மைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் ஒன்­பது பேரை மீட்­ட­தாக மாநில அர­சாங்­கத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டது.

வியட்­நா­மின் ஃபு குவோக் தீவில் ஒன்­பது பேர் மீட்­கப்­பட்­ட­தாக வியட்­நா­மின் 'மோட் தி கியோய்' நாளி­தழ் தெரி­வித்­தது. அங்­குள்ள அதி­கா­ரி­கள் இவ்­வாறு கூறி­ய­தாக அது குறிப்­பிட்­டது.

காணா­மற்­போ­யி­ருக்­கும் சீனர்­களைப் பற்றி மாநில அர­சாங்­கம் விவ­ரம் ஏதும் தெரி­விக்­க­வில்லை. மீட்­கப்­பட்­டோ­ரிலோ காணா­மற்­போ­ன­வர்­கி­ளிலோ கம்­போ­டி­யர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னரா என்­பது குறித்­தும் தக­வல் இல்லை.

சிஹா­னுக்­வில், சுற்­றுப்­ப­ய­ணி­கள், சூதாட்­டத்­தில் ஆர்­வம் கொண்­ட­வர்­கள் ஆகி­யோ­ரி­டையே பிர­ப­ல­மான நக­ரம்.

சீனா­வி­லி­ருந்து வரும் சுற்­றுப்­ப­ய­ணி­கள், வர்த்­த­கர்­கள் ஆகி­யோ­ரி­டையே கம்­போ­டியா பிர­ப­ல­மாக இருந்து வந்­துள்­ளது. எனி­னும், சீனா­வில் நடப்­பில் இருக்­கும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்டுப்­பா­டு­க­ளால் சீனர்­கள் பல­ரால் கடந்த ஈராண்­டு­க­ளா­கப் பய­ணம் மேற்­கொள்ள முடி­ய­வில்லை.

சிஹா­னுக்­வில்­லில் பல சூதாட்­டக் கூடங்­கள் இருக்­கின்­றன. இணை­யக் குற்­ற­வா­ளி­கள் இயங்கு­வ­தா­கச் சந்­தே­கிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அங்கு காவல்­துறை சோத­னை­களும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.