'தைவான் தொடர்பில் அமெரிக்கா மிகத் தவறான அறிகுறிகளைக் காட்டுகிறது'

'தைவான் தொடர்பில் அமெரிக்கா மிகத் தவறான அறிகுறிகளைக் காட்டுகிறது'

1 mins read
aac3d1df-4c77-4f51-a003-30fae9437b03
-

பெய்­ஜிங்: தைவான் விவ­கா­ரத்­தில் அமெ­ரிக்கா மிகத் தவ­றான, அபா­ய­க­ர­மான அறி­கு­றி­க­ளைக் காட்­டு­வ­தாக சீனா கூறி­யுள்­ளது.

தைவான் தொடர்­பில் அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் நிலை­நாட்டு­வது மிக­வும் முக்­கி­யம் என்று நேற்று முன்­தி­னம் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர், சீன வெளி­யு­றவு அமைச்­ச­ரி­டம் கூறி­யி­ருந்­தார். அதைத் தொடர்ந்து சீனா இவ்­வாறு பதி­ல­ளித்­துள்­ளது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­க­னுக்­கும் சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யிக்­கும் இடையே நடை­பெற்ற ஒன்­றரை மணி­நே­ரப் பேச்சு­வார்த்­தை­யில் தைவான் விவ­கா­ரத்­தைப் பற்­றி­த்தான் அதி­கம் பேசப்­பட்­ட­தென அமெ­ரிக்க அதி­காரி ஒரு­வர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் பொதுச் சபை கூடி­ய­போது இரு­வ­ரும் சந்­தித்­துப் பேசி­னர்.

"தைவான் விவ­கா­ரம் சீனா­வின் தனிப்­பட்ட பிரச்­சினை. அதற்கு எவ்­வாறு தீர்­வு­கா­ணப்­படும் என்­ப­தில் தலை­யிட அமெ­ரிக்­கா­வுக்கு உரிமை கிடை­யாது," என்று திரு வாங் சொன்­ன­தா­க சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.