சிங்கப்பூரின் உணவு அங்காடி நிலையத்தில் விற்கப்படும் பிரபல உணவு வகைகள் இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கிடைக்கின்றன.
கோழிச் சோறு, சில்லி நண்டு, லக்சா, பிராட்டா, வாட்டிய காயா ரொட்டி ஆகிய அனைத்து உணவு வகைகளும் அங்கு விற்கப்படுகின்றன.
சிங்கப்பூர் உணவு அங்காடி நிலையத்தை போன்றே நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிலையம். மொத்தம் 17 கடைகள் இங்குள்ளன. இவற்றில் 11 கடைகள் சிங்கப்பூர் கடைக்காரர்களால் நிறுவகிக்கப் படுகின்றன. பல கடைகள் சிங்கப்பூரில் சில உணவு வகைகளுக்கு பெயர்பெற்றவை.
சீன, மேற்கத்திய, மலாய், இந்திய உணவு வகைகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. இதோடு சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் காபியும் இங்கு விற்கப்படுகிறது.
வரும் 28 தேதியன்று உணவு அங்காடி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.