மறைந்த எலிசபெத் அரசியார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை எழுப்பப்பட்டுள்ளது. அவரது பெயர், பிறந்த தேதி, மறைந்த தேதி ஆகிய குறிப்புகள் கல்லறையில் பதிக்கப்பட்டுள்ளன. கருப்பு பளிங்கு கல்லில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.
விண்ட்சோர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 19ஆம் தேதி அரசு மரியாதையுடன் அரசியாரின் இறுதிச் சடங்கு நடந்தது. ராணியின் கல்லறையில் அவருடைய பெற்றோர், கணவர் ஆகியோரின் இறந்த தேதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசியாரின் கணவர் இளவரசர் பிலிஃப் சென்றாண்டு காலமானார்.
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அரச குடும்பத்தினரின் உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படும்.
எலிசபெத் ராணி இம்மாதம் 8ம் தேதியன்று காலமானார்.