சுவிட்சர்லாந்தில் காலாவதியான 10 மி. கொவிட்-19 தடுப்பூசி

சுவிட்சர்லாந்தில் காலாவதியான 10 மி. கொவிட்-19 தடுப்பூசி

1 mins read
6572cda8-7c0b-4aed-93f4-1ee33019c57f
படம்: எஏஃப்பி -
Google News Preferred Icon

சுவிட்சர்லாந்தில் காலாவதியான 10.3 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் அழிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்தும் மொடர்னா தடுப்பூசி மருந்து எனக் கூறப்பட்டது. காலாவதியான காரணத்தினால் அவற்றை அழிப்பதை தவிர வேறுவழியில்லை என்று அமைச்சு கூறியது. இவற்றின் மொத்த மதிப்பு 280 மில்லியன் பிராங்ஸ் (400 மில்லியன் வெள்ளி)

கொவிட்-19 கிருமித் தொற்று பரவத் தொடங்கியபோது, தடுப்பூசிகள் வாங்கிய முதல் ஒருசில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் அடங்கும். பல தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அது தடுப்பூசியை வாங்கியது.

சுவிட்சர்லாந்தில் கிருமித் தொற்றால் 13,556 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் 8.7 மில்லியன் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.